அலேப்போ தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனின் புதிய புகைப்படம்

அலேப்போ தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனின் புதிய புகைப்படம்
அலேப்போ தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனின் புதிய புகைப்படம்
Published on

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் அலேப்போ நகரத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தன்னந்தனியே உட்காந்திருந்த சிறுவனின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரிய அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்யாவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அலேப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்நகரில் வசித்து வந்த பலர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் 5 வயது சிறுவன் ஒம்ரான் படுகாயமடைந்து முகத்தில் ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்திருக்கும் படம் உலகத்தின் மனசாட்சியை உலுக்கியது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ஓம்ரானின் 10 வயது சகோதரர் கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஓம்ரான் அரசின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுவன் ஓம்ரான் தனது தந்தையுடன் அரசுக்கு ஆதரவான தொலைக்காட்சியில் தோன்றினார். அந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த புகைப்படங்களை பலரும் தங்களுடைய வலைப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓம்ரானின் தந்தை, “நாங்கள் அலேப்போவை விட்டு வெளியேற மாட்டோம். இங்குதான் வாழ விரும்புகிறோம். என் மகன் ஓம்ரான் குணமடைந்துவிட்டான். அதிபர் ஆசாத் படையினரின் பாதுகாப்பில் உள்ளோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com