இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பொருளாதார தடை; அமெரிக்காவின் அறிவிப்பும் தற்போதைய நிலையும்!

”இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அடுத்து, வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும்” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் ட்ரோன் தாக்குதல்
ஈரானின் ட்ரோன் தாக்குதல்ட்விட்டர்
Published on

இஸ்ரேல் - ஈரான் மீது போர்ப் பதற்றம்:

காஸா நகர் மீது, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் போர் தொடுத்துவரும் நிலையில், தற்போது ஈரான், இஸ்ரேல் மீது தொடுத்த போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. இது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என பலரும் அச்சத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தாக்குதல் நடத்தியதில் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி, வெடிகுண்டுகளைச் சுமந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததுடன், அவை இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறியது. இதனால் அப்பகுதியில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

அதேநேரத்தில், ’ஈரானின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்’ என்று இஸ்ரேலிய ராணுவத் தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி (Herzi Halevi) தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையில் தீவிர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனாலும், ஈரானை எந்நேரமும் இஸ்ரேல் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: Fact Check|ஈரானிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தினாரா ஜோர்டான் இளவரசி.. வைரலான செய்தி.. உண்மை என்ன?

ஈரானின் ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல்-ஈரான் மோதல்| உலகப்போருக்கு வாய்ப்பு.. டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!

”இதைவிடப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்” - ஈரான் எச்சரிக்கை

இதற்கிடையே, ‘இஸ்ரேல் நிலைமையை மோசமாக்காமல் இருக்க வேண்டும்’ என்று சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ’நிலைமையை மோசமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்கா வலியுறுத்தினாலும், இஸ்ரேலின் பாதுகாப்பு என்று வரும்போது அந்நாட்டுக்கே தங்கள் ஆதரவு என்று அமெரிக்கா கூறியுள்ளது. அதனால்தான், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி ஈரான் தாக்கியதாகக் கூறப்படும் ட்ரோன்களை, இடைமறித்து அழித்த பங்கில் பாதி அமெரிக்காவுக்கும் உண்டு. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 80 ட்ரோன்களை அமெரிக்கா மட்டுமே வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி பகேரி, “இன்னொரு முறை இஸ்ரேல் எங்களைத் தாக்கினால், நொடிகளில் பதிலடி கொடுக்கப்படும். அதுவும் இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்களை உபயோகிப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ’எங்களுடைய தூதரகம் மீது கடந்த 1ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியே நாங்கள் தொடுத்த தாக்குதல் ஆகும்’ என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், இந்த விஷயத்தில் தற்போது இரு நாடுகளும் அமைதி காத்து வருகின்றன. இனி, இஸ்ரேலின் அடுத்தகட்ட நகர்வைப் பொருத்தே இரு நாடுகளுக்கிடையே நேரடிப் போர் நடைபெறுமா எனத் தெரியவரும். எனினும், அப்பகுதி போர்ப் பதற்றத்திலேயே காணப்படுகிறது.

இதையும் படிக்க: 2024ல் 14 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா.. மெயில் அனுப்பிய எலான் மஸ்க்; கவலையில் ஊழியர்கள்!

ஈரானின் ட்ரோன் தாக்குதல்
“இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்!” - இஸ்ரேல் ராணுவத் தளபதி

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

இந்த நிலையில், ஈரான் தாக்குதலுக்கு ஜி-7 தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், “இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை அடுத்து, வருகிற நாட்களில் ஈரானுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும். ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணை திட்டங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சி காவல் படை மற்றும் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் அமைப்புகளுக்கு எதிராகவும் தடைகள் விதிக்கப்படும். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியாகும்” என அவர் கூறினார்.

உலக நாடுகளுக்கு ஈரான் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருகிறது. இது அந்நாட்டின் வருவாயில் கணிசமான பங்கு வகிக்கிறது. எனவே, இதனை பாதிக்கும் வகையில் பொருளாதாரத் தடைகள் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாமீது பொருளாதாரத் தடையை விதித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 1 மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கம்.. எக்ஸ் தளம் அதிரடி.. ஏன் தெரியுமா?

ஈரானின் ட்ரோன் தாக்குதல்
இதுவரை செய்யாததையும் செய்த ஈரான்.. அதையும் இஸ்ரேல் முறியடித்த வியூகம் எது? தற்போதைய நிலவரம் என்ன..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com