4 வயது குழந்தை கண்டுபிடித்த 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம்!

4 வயது குழந்தை கண்டுபிடித்த 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம்!
4 வயது குழந்தை கண்டுபிடித்த 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம்!
Published on

தெற்கு வேல்ஸ் கடற்கரையில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித்தடம் 4 வயது குழந்தையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் லிலி வில்டர் என்கிற 4 வயது குழந்தை, தனது தந்தை ரிச்சர்ட், தாய் சாலி உடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்தக் குழந்தை, கடற்கரையில் டைனோசரின் கால் தடத்தை அடையாளம் கண்டுள்ளார். இதையடுத்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் சிறுமியின் குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கவே, நிபுணர்கள் அந்த காலடித்தடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.  

சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் இந்த கால்தடம் இத்தனை ஆண்டுகளாக ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதும் என்றும் டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை நிறுவ இந்த காலடித்தடம் உதவும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வேல்ஸில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின் நிபுணர் சிண்டி ஹோவெல்ஸ் கூறுகையில், ‘’இந்த கால்தடம் 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதை 75 சென்டிமீட்டர் உயரம் கொண்ட டைனோசரின் கால்தடமாக இருக்கலாம். ஆனால் எந்த வகையான டைனோசர் எனக் கூறமுடியவில்லை. இதுவரை இந்தக் கடற்கரையில் கிடைத்த கால்தடங்களிலேயே இந்த கால்தடம் தான் மிகவும் சிறந்தது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com