டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிப்பு

டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிப்பு
டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிப்பு
Published on

உலகில் வாழ்ந்து அழிந்த விலங்குகளில் பிரமிக்க வைக்கக் கூடிய விலங்கு டைனோசர்கள். இவற்றின் பல இனங்கள், பல கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நீண்ட கழுத்து, நீண்ட வால், கூர்மையான முதுகு ஆகியவற்றுடன் ராட்சச உருவ அமைப்பு கொண்ட டைனோசர்களை சினிமாவில் பார்த்திருக்கிறோம். 200 அடி உயர டைனோசர்கள் கூட அசால்டாக உலா வந்ததை பல ஆய்வுகள் தெளிவு படுத்தியுள்ளது. பெரிய பெரிய மிருகங்களை வேட்டையாடிச் சாப்பிடும் டைனோசர்கள், அமெரிக்காவில் அதிகம் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இப்போது அமெரிக்காவின் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சுமார் 75 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய இனத்துக்கு Daspletosaurus horneri என பெயரிடப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர், இந்தப் புதியவகை டைனோசரின் முகம் மற்றும் உடலமைப்பு, முதலைகள் போன்று இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். இவை அதிக உணர்திறன் அல்லது மோப்ப சக்தியை கொண்ட இனமாக வாழ்ந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com