மார்க் ரூட்
மார்க் ரூட்எக்ஸ் தளம்

நெதர்லாந்து|14 ஆண்டுகால ஆட்சி.. இறுதி நாளன்று சைக்கிளில் எளிமையாக வெளியேறிய EX பிரதமர்.. #ViralVideo

நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட், தன்னுடைய கடைசி நாள் அன்று பிரதமர் அலுவலகத்திலிருந்து எளிமையாக சைக்கிளில் சென்றதுதான். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது
Published on

ஐரோப்பிய தேசமான நெதர்லாந்தில் கடந்த 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மார்க் ரூட். இவர் ஒரு வலதுசாரி ஆதரவாளர். இந்த நிலையில் மார்க் ரூட், வரும் அக்டோபர் மாதம் நேட்டோ பொதுச் செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். முன்னதாக, தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அடுத்த நெதர்லாந்து பிரதமராக டிக் ஸ்கூஃப் (Dick Schoof) தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு, அந்த நாட்டு மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தி ஹேக் நகரில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில், அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட மார்க் ரூட், அனைவருக்கும் நன்றி தெரிவித்தபடி பிரதமர் அலுவலகத்தைவிட்டு வெளியேறினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அவர் எளிமையாக சைக்கிளில் சென்றதுதான். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: உ.பி.| இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட பள்ளி முதல்வர்.. வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!

மார்க் ரூட்
குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய அஜித்! #ViralVideo

அதாவது, மற்ற சராசரி மனிதர்களைப்போலவே அவரும் ஒரு சராசரி மனிதனாக மிகவும் எளிய முறையில் சைக்கிளில் பயணிப்பது பேசுபொருளாகி வருகிறது. ஆனால் அவர், இன்று மட்டுமல்ல... பிரதமர் பதவியில் இருந்தபோதும் அடிக்கடி சைக்கிளில் சென்றுள்ளார். ஒருமுறை பொருட்கள் வாங்க அங்காடிக்கு சைக்கிளிலேயே சென்ற செய்தி வைரலானது. தாம் மட்டுமல்லாது பிறரையும் சைக்கிள் மிதிக்க ஆர்வப்படுத்தும் அவர், நெதர்லாந்துக்கு பிரதமர் மோடி அரசுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவருக்கும் ஒரு சைக்கிளைப் பரிசாக வழங்கியிருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், சுதந்திரத்திற்கான கட்சி (PVV) எனும் வலதுசாரி கட்சி, 150 இடங்களில் 37 இடங்களை வென்றது. அக்கட்சியின் தலைவர் கீர்ட் வைல்டர்ஸ் (Geert Wilders) மேலும் சில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரு எருமை மாட்டுக்கு இருவர் உரிமை.. திணறிய போலீஸ்.. இறுதியில் தீர்வுகண்ட எருமை.. உ.பியில் ருசிகரம்!

மார்க் ரூட்
1,100 கி.மீ சைக்கிள் மிதித்து வந்த ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சல்லு பாய்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com