"உயரம் குறைந்துவிட்டதா இமயமலை.." - ஆய்வு நடத்துகிறது நேபாளம்

"உயரம் குறைந்துவிட்டதா இமயமலை.." - ஆய்வு நடத்துகிறது நேபாளம்
"உயரம் குறைந்துவிட்டதா இமயமலை.." - ஆய்வு நடத்துகிறது நேபாளம்
Published on

2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக இமயமலையின் உயரம் மற்றும் இருப்பிடமும் மாறியிருக்கலாம் என நேபாள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் தொடர்பாக புள்ளிவிவரங்களை சேகரிக்க விரைவில் இமயமலையின் உயரம் மற்றும் இருப்பிடத்தை ஆராய உள்ளதாக நேபாள கணக்கெடுப்புத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கு சுமார் 75கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், மலையின் உச்சியில் மூன்று இடங்களிலிருந்து மலையின் உயரத்தை அளக்கும் பணி நடைபெறும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்காக பல உபகரணங்களை மலையின் உச்சிக்கு கொண்டு செல்ல வேண்டியதுள்ளதாகவும்,  இதற்காக ஷெரப்பா எனப்படும் மலை இனமக்களின் உதவியை நாடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இமயமலையில் ஏறிய வீரர்கள், உச்சியில் பல பாறைகள் இருந்த இடம் தெரியாமல் நொறுங்கி விட்டதாகவும், வழக்கமாக மலையேறும் வழிகளில் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் நிலநடுக்கத்திற்கு முன்பு 8,848 மீட்டர் உயரத்தில் உலகத்தின் உயரமான மலையாக இருந்த இமயமலை, தற்போதும் அதே பெருமையோடு இருக்கிறாதா அல்லது உயரம் குறைந்துள்ளதா என்பது ஆய்வுக்கு பின் தெரியவரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com