எவரெஸ்ட்டில் மோதி நொறுங்கிய ஹெலிகாப்டர்: பயணித்தவர்கள் நிலை என்ன?
நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரத்தைப் பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் உட்பட 6 பேருடன் சென்ற மானாங் ஏர் 9N-AMV என்ற ஹெலிகாப்டர் இன்று காலை 10:15 மணியளவில் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது.
சரியாக, சொலுகும்புவில் உள்ள சுர்கியில் இருந்து புறப்பட்டு, 15 நிமிடங்களில் ஹெலிகாப்டர் தனது தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகாப்டர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில், பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலையால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹெலிகாப்டரில் இருந்த 5 வெளிநாட்டுப் பயணிகளும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், கேப்டனின் நிலைமை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.