ஸ்வஸ்திகா கொடி, வெறுப்பு முழக்கம்! அமெரிக்காவில் ஹிட்லரின் நாஜி ஆதரவு குழுவினர் நடத்திய பேரணி!

அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் நியோ-நாஜி குழுவினர் பேரணியாகச் சென்றதைப் பலரும் தங்களுடைய செல்போனில் படம்பிடித்துள்ளனர்.
model image
model imagetwitter
Published on

அமெரிக்காவின் 'Tennessee' மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தீவிர ஹிட்லரின் நாஜி ஆதரவு குழுவினர் தலைநகர் நாஷ்வில்லே தெருக்களில் அணிவகுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் கறுப்பு நிற பேண்ட்டுடன், முகத்தை மறைத்தபடி, முழு சிவப்பு நிற டீஷர்ட் அணிந்து, ஸ்வஸ்திகா கொடிகளை ஏந்தியபடி சென்றனர்.

இதை அங்குள்ளவர்கள் தங்களுடைய செல்போன்களில் படம் பிடித்துள்ளனர். அவர்களுடைய சிவப்பு நிற டிஷர்ட்டின் பின்புறத்தில் ’ரத்தப் பழங்குடி’ என எழுதப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள், மறைந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரால் பரப்பப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த ரத்தப் பழங்குடியைச் சேர்ந்த குழுவினர் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருந்தனர்.

இந்தக் குழுவை 37 வயதான முன்னாள் கடற்படை அதிகாரியான கிறிஸ்டோபர் போல்ஹாஸ் என்பவர் கடந்த 2021இல் நிறுவி, வழிநடத்தி வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் இக்குழுவினரின் கிளைகள் செயல்படுவதாகவும், அவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களை ஆதரிப்பதாகவும் Anti-Defamation League தெரிவித்துள்ளது.

இவர்கள் யூதர்கள், வெள்ளையர் அல்லாதோர், LGBTQ+ குழுவினரை குறி வைத்து வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், பிரிவினை வாத கருத்துக்களை பரப்புவதாகவும் கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் வாழும் விளிம்புநிலை மக்களுக்கு அச்சுறுத்தலாக உருவாக்கக்கூடும் என்று சிலர் கூறுகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. இது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com