தாய்லாந்தில் பெண் ஒருவருக்கு பிரசவத்தின் போது ஊசி விழுந்தது தெரியாமல், தவறுதலாக ஊசியுடன், வயிற்றை தைத்த மருத்துவர்கள்..
தாய்லாந்தின் நாராதிவாட் மாகாணத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கு நீண்டநாட்களாக அடிவயிற்றில் வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. ஏழ்மை நிலையில் இருந்த அவரால் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளமுடியாத நிலையில், சமீபத்தில் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாவேனா அறக்கட்டளைக்கு சென்று மருத்துவ உதவி கோரியுள்ளார்.
அவர்களின் உதவியோடு அப்பெண் சிகிச்சை மேற்கொண்டதில், அவரது வயிற்றில் ஊசி ஒன்று இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பெண்ணிடம் விசாரித்ததில், சமீபத்தில் அறுவை சிகிச்சை எதும் மேற்கொள்ளவில்லை என்றும், கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பு அப்பெண்ணின் பிரசவ சமயத்தில் செவிலியர் ஒருவர் அவரது உடலில் தையல் போடும் பொழுது ஊசி ஒன்று அப்பெண்ணின் உள்ளுறுப்பில் விழுந்துள்ளது .
அதை மருத்துவர் எடுக்க முயற்சித்தும் முடியவில்லை. அத்துடனே அப்பெண்ணிற்கு தையல் போட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அந்த ஊசியானது 18 வருடமாக அப்பெண்ணின் உடலில் இருந்து அவருக்கு வயிற்றுவலியை ஏற்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அறக்கட்டளையின் உதவியால் அப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஊசியானது அகற்றப்பட்டுள்ளது.