ராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது!

ராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது!
ராகுலை எதிர்த்து போட்டியிட்டவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது!
Published on

ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துஷார் வெள்ளப்பள்ளி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளப்பள்ளி. கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த கூட்டணியின் கேரள அமைப்பாளராகவும் அவர் உள்ளார். இவர் ஐக்கிய அரபி எமிரேட்ஸில் உள்ள அஜ்மானில் கட்டுமான தொழில் செய்து வந்தார். 10 வருடத்துக்கு முன், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் விற்றுவிட்டார்.

இதில், நஸில் அப்துல்லா என்பவருக்கு ரூ.19 கோடி தரவேண்டியது இருந்ததாம். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர். இதற்காக துஷார் தேதி குறிப்பிடாத காசோலை ஒன்றை கொடுத்தார். ஆனால், அந்த காசோலை பணமின்றி திரும்பி வந்தது. 

இந்நிலையில் நஸில் அப்துல்லா, இதுதொடர்பாக பேச வருமாறு, துஷாரை அஜ்மானுக்கு அழைத்தார். அதன்படி நேற்று அங்கு சென்றார் துஷார். ஓட்டல் ஒன்றில் பண விவகாரம் தொடரபாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால், அஜ்மான் போலீசில், நஸில் அப்துல்லா புகார் செய்தார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com