பனாமா ரகசிய ஆவணங்கள் வெளியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்திருக்கிறது.
இதையடுத்து தனது கேபினட் சகாக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். பதவியில் தொடருவதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதுடன், வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
பஞ்சாப் முதல்வர் ஷாபாஸ் ஷரீப் மற்றும் பிரதமரின் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு அமைச்சரவையைக் கூட்டுவது என நவாஸ் ஷெரீப் முடிவெடுத்திருக்கிறார். முன்னதாக பனாமா ஆவணங்கள் தொடர்பான கூட்டு விசாரணைக் குழுவின் அறிக்கையில் நவாஸ் ஷெரீப் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.