பனாமா ஆவண ஊழல் வழக்கில் ஒரு மாதத்துக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் இரு மகன்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசியலை புரட்டிப் போட்ட பனாமா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவரது இரு மகன்களான ஹஸன் மற்றும் ஹூஸைனின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது நவாஸின் மகன்கள் லண்டனில் தங்கி இருந்து, தாயார் குல்சுமின் சிகிச்சைக்கு உதவி வருகின்றனர். இந்தச் சூழலில் பனாமா ஆவண ஊழல் வழக்கை விசாரித்து வரும் பாகிஸ்தான் நீதிமன்றம், ஒரு மாத கால கெடுவுக்குள் அவர்களை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. அதற்குள் அவர்கள் ஆஜராகாவிட்டால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களது சொத்துகள் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.