பாக். முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

பாக். முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு
பாக். முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு
Published on

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவராக தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘பனாமா கேட்’ ஊழலில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார். பாகிஸ்தான் சட்டப்படி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சித்தலைவர் பொறுப்பு வகிக்க முடியாது என்பதால், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.

இந்த நிலையில், அரசு ஊழியர் தவிர்த்து, எந்த ஒரு நபரும் எந்த ஒரு கட்சியிலும் எந்தவொரு பதவியும் வகிக்க முடியும் என்ற வகையில், தேர்தல் சீர்திருத்த மசோதா ஒன்றை அந்த நாட்டின் பாராளுமன்ற இருஅவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் பாராளுமன்ற உறுப்பினராக தகுதி படைத்த ஒருவர்தான் கட்சிக்கு தலைமை ஏற்க முடியும் என்று உள்ள விதி நீக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி மசோதா நகல்களை கிழித்து எரிந்து ரகையில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று இரவே பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைனும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரை தவிர தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com