போயிங் விமானத்தை விட பெரியது.. பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்..

போயிங் விமானத்தை விட பெரியது.. பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்..
போயிங் விமானத்தை விட பெரியது.. பூமியை நோக்கி வரும் பெரிய விண்கல்..
Published on

போயிங் 747 விமானத்தை விட பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. நாசாவின் CENTRE FOR NEAR - EARTH OBJECTS மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.

2020 RK2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லை கடந்த சில நாட்களாக நாசா கவனித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போலோ ஆஸ்டராய்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த விண்கல்லை கடந்த மாதம் நாசா அடையாளம் கண்டது.

சுமார்  118 முதல் 256 அடி வரை அளவுள்ள இந்த விண்கல் நொடிக்கு 6.68 கிலோ மீட்டரை வேகத்தில் பூமியின் புவி வட்டப்பாதையை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. EST நேரப்படி பகல் 1 மணி அளவில் இந்த விண்கல் பூமியை மோதும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் போயிங் 747 - 8 சீரிஸின் இறக்கையை விட பெரிதாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த விண்கல் பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் மிகமிக குறைவு என்றும், பூமியின் வட்டப்பாதையை சேஃபாக எந்தவித பாதிப்புமின்றி இது கடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com