செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் வாழ்ந்தனவா என கண்டறியும் சோதனையை அமெரிக்காவின் ஆய்வுக் கலமான பெர்செர்வென்ஸ் துவக்கியுள்ளது.
இந்த ஆய்வுக்கலம் செவ்வாயில் உள்ள பெரும் பள்ளத்திலிருந்து மண்ணை எடுத்து ஆய்வு செய்ய உள்ளதாக இந்த ஆய்வு திட்டத்தின் இயக்குநர் கென் ஃபெர்லி தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தில் உயிரினம் ஏதேனும் வாழ்ந்தது உண்மை என்றால் அது நுண்ணுயிரியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசிரோ பள்ளத்தில் இருந்து ஆய்வுக்கலம் எடுத்து அனுப்பியுள்ள படங்கள் பூமியின் சுற்றுப்புறங்களில் உள்ளதைப் போலவே இருப்பதாகவும் கென் ஃபெர்லி தெரிவித்தார்.
செவ்வாய் கிரகத்தில் எடுத்த மண் மாதிரியை சோதித்து அது தொடர்பான தகவலை பூமிக்கு அனுப்புவதோடு இல்லாமல் அம்மண்ணை தன் உடலுக்குள் பாதுகாத்து வைக்கும் பணியையும் பெர்செர்வன்ஸ் ஆய்வுக்கலம் செய்யும் என்றும் திட்ட இயக்குநர் தெரிவித்தார். செவ்வாயில் மனிதர்கள் எதிர்காலத்தில் சென்றால் சுவாசிக்க வழி இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தப்பட உள்ளதாக கென் ஃபெர்லி தெரிவித்தார்