”இரு நாட்டின் வளர்ச்சிக்கு நாம் இணைந்து பாடுபடுவோம்” - டொனால்டு டிரம்ப்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
modi
modi x
Published on

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகளின் படி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர், புளோரிடாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், ”இது அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். அமெரிக்கா எங்களுக்கு முன்னோடியில்லாத ஆணையை வழங்கியுள்ளது. இந்த தருணம் இந்த நாடு குணமடைய உதவும்” என்றும் அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

"உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ட்ரம்பின் ஆட்சியில் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும். இரு நாட்டின் வளர்ச்சிக்கு நாம் இணைந்து பாடுபடுவோம்” என்று தனது தெரிவித்துள்ளார். மேலும் டிரம்பும் தானும் சந்தித்துக்கொண்ட படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com