மாவீரன் நெப்போலியன் புற்றுநோயால் இறந்தது உறுதி... 200 ஆண்டுகளுக்குப் பின் விலகிய மர்மம்!

மாவீரன் நெப்போலியன் புற்றுநோயால் இறந்தது உறுதி... 200 ஆண்டுகளுக்குப் பின் விலகிய மர்மம்!
மாவீரன் நெப்போலியன் புற்றுநோயால் இறந்தது உறுதி... 200 ஆண்டுகளுக்குப் பின் விலகிய மர்மம்!
Published on

பிரான்சின் முன்னாள் பேரரசரும் இராணுவ தலைவருமான மாவீரன் நெப்போலியன் மரணத்தில் உள்ள மர்மம் 200 ஆண்டுகளுக்கு பின் விலகியுள்ளது.

பிரான்சின் முன்னாள் பேரரசரும் இராணுவ தலைவருமான மாவீரன் நெப்போலியன் பிரிட்டன் - பிரான்ஸ் இடையே நடந்த போருக்கு பின் பிரிட்டன் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். ஆப்பிரிக்கா அருகே உள்ள செயிண்ட் ஹெலனா தீவில் அடைத்துவைக்கப்பட்ட அவர், புற்றுநோயால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தனிமைச் சிறையில் இருந்த நெப்போலியனுக்கு என்ன நடந்தது? அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா? என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

இந்நிலையில் 1821 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் ஒன்று செயிண்ட் ஹெலனா தீவில் இருந்து சென்னையின் அப்போதைய ஆளுநர் சர் தாமஸ் மன்றோவுக்கு அனுப்பப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதில், மாவீரன் நெப்போலியன் மே 5 ஆம் தேதி மாலை உயிரிழந்தாகவும், அவரது உடல் அதற்கு மறுநாளே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் நடத்தப்பட்ட கூராய்வு முடிவில் அவர் குடல்புற்றுநோயால் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நெப்போலியனின் தந்தையும் புற்றுநோயால் இறந்ததாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com