அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு பெண் சபாநாயகர்

அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு பெண் சபாநாயகர்
அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கு பெண் சபாநாயகர்
Published on

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் சபாநாயகராக நான்சி பெலோசி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் ஜனநாயக கட்சி சார்பில் நான்சி பெலோசியும், குடியரசு கட்சி சார்பில் கெவின் மெக்கர்த்தியும் போட்டியிட்டனர். இதில் 220 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று நேன்சி பெலோசி வெற்றி பெற்றுள்ளார். நான்சி பெலோசி இரண்டாவது முறையாக இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு வரை இவர் பிரதிநிதிகள் அவையின் சபாநாயகராக பதவி வகித்தார். 

அமெரிக்க அரசியலில் மிக சக்தி வாய்ந்த பதவிகளுள் சபாநாயகர் பதவியும் ஒன்று. நேன்சி பெலோசிக்கு இரண்டாவது முறையாக இந்த பதவி கிடைத்துள்ளது. பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டதன் 100ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் போது, பிரதிநிதிகள் அவையின் சபாநாயகராக ஒரு பெண் தேர்வாகி இருப்பது பெருமையாக உள்ளதென நான்சி பெலோசி தெரிவித்துள்ளார். மேலும் 78 வயதான நான்சி பெலோசி அரசு பணிகள் முடக்கத்தை சரி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனினும் எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு ஆதரவில்லை என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com