சிலி நாட்டில் உள்ள ஏரியில் இருந்து வித்தியாசமான முறையில் உணரப்படும் சத்தம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மத்திய சிலியில் உள்ள பிரசித்தி பெற்ற லாகுனா டெல் மவுலே ஏரியில் உள்ள தண்ணீரில் இருந்து பரிச்சயமற்ற சத்தம் கேட்பதாக கூறப்படுகிறது. இது வேற்றுக் கிரகத்தில் இருந்து வரும் சத்தம் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
அதேசமயம் ஏரியை சுற்றியுள்ள பனிமலைகளில் உள்ள பனிக்கட்டிகள் மிகவும் நுணுக்கமான முறையில் அசைவதாலோ அல்லது உடைவதாலோ ஏற்படும் சத்தம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும், இந்த சத்தத்திற்கு காரணம் என்ன என்று தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.