சவுதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப நிலைக்கு மத்தியிலும் திரளான இஸ்லாமியர்கள் தங்களது ஹஜ் புனித பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். சவுதியில் தற்போது கடுமையான வெப்ப அலை வீசுவதால், ஹஜ் பயணிகளுக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி, குளிர்சாதன வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள், மினாவில் உள்ள சாத்தானின் தூணில் கற்களை எறிந்து தங்களது கடமையை நிறைவேற்றினர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகளை ஏந்தியவாறும், முக்காடு அணிந்தவாறும் திரளான இஸ்லாமியர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர். இன்றுடன் ஹஜ் புனித பயணம் நிறைவடையும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து திரளான இஸ்லாமியர்கள் மெக்கா மற்றும் மதீனாவில் வழிபாட்டிற்காக குவிந்துள்ளனர்.
இதனிடையே சவுதியில் வெப்ப அலை காரணமாக 18 வெளிநாட்டு பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் ஹஜ் புனித யாத்திரையில் சுமார் 18 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.