மியான்மரில் ரோஹிங்ய இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்து அயர்லாந்து இசையமைப்பாளர் பாப் ஜெல்டாஃப், தனக்கு வழங்கப்பட்ட டப்ளின் சுதந்திர விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.
மியான்மரில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடியதற்காக ஆங் சான் சூகிக்கு கடந்த 1999ஆம் ஆண்டு டப்ளின் சுதந்திர விருது அறிவிக்கப்பட்டது. வீட்டுக் காவலில் இருந்து விடுதலையான பின் 2012ஆம் ஆண்டில் அந்த விருதை ஆங் சான் சூகி பெற்றுக் கொண்டார். அவருடன் வறுமை ஒழிப்பு ஆர்வலரும், அயர்லாந்து இசையமைப்பாளருமான பாப் ஜெல்டாஃப்-க்கும் அந்த விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் மியான்மரில் ரோஹிங்ய இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளும், பாலியல் கொடுமைகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் சுமார் 6 லட்சம் பேர் வங்கதேசத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இருப்பினும் அங்கு போதுமான உணவு மற்றும் உரிய வசதிகள் இல்லாமல் லட்சக்கணக்கானோர் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் ரோஹிங்ய இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை தட்டிக் கேட்காமல் மவுனமாக இருந்து வரும் மியன்மாரின் பிரதமர் ஆங் சான் சூகியை கண்டித்து, பாப் ஜெல்டாஃப் தனக்கு வழங்கப்பட்ட டப்ளின் சுதந்திர விருதை விருதை திருப்பிக் கொடுத்துள்ளார்.