கலிபோர்னியா தீ: வீடுகள் சாம்பல், நள்ளிரவில் வெளியேறிய ஹாலிவுட் பிரபலங்கள்!

கலிபோர்னியா தீ: வீடுகள் சாம்பல், நள்ளிரவில் வெளியேறிய ஹாலிவுட் பிரபலங்கள்!
கலிபோர்னியா தீ: வீடுகள் சாம்பல், நள்ளிரவில் வெளியேறிய ஹாலிவுட் பிரபலங்கள்!
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, ஹாலிவுட் பிரபலங்கள் உட்பட பலர் நள்ளிரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. ‌தீயின் தீவிரம் அதிகரித்திருப்பதை அடுத்து மாகாண ஆளுநர் கவின் நியூசம் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். சோனாமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சலோனா பகுதியிலுள்ள ஏராளமான குடியிருப்புவாசிகள் வீடுகளில் இருந்து வெளியேறினர். 

காட்டுத்தீயால் இதுவரை 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி நாசமான நிலையில்‌ 10 சதவீத தீ மட்டுமே கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் சில ஹாலிவுட் பிரபலங்கள் கட்டாயமாக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கு பலகோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்கள் தீயில் எரிந்து நாசமாயின. 

’லாஸ்ஏஞ்சல்ஸ் டஸ்கர்ஸ்’ என்ற பேஸ்கட்பால் அணியின் வீரர் லெப்ரான் ஜேம்ஸ் கூறும்போது, ’வீட்டில் இருந்து உடனடியாக வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதிகாலை 4 மணிக்கு மனைவி, குழந்தைகளுடன் தங்குவதற்கு அறைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்தார். இவர், இந்தப் பகுதியில் 8 பெட்ரூம் கொண்ட பங்களாவை கடந்த 2017 ஆம் ஆண்டு வாங்கியிருந்தார்.

நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் அளுநருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் உட்பட ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர். அவர் நடித்துள்ள ’டெர்மினேட்டர்: டார்க் பேட்’ பட பிரிமீயர் நேற்றிரவு நடப்பதாக இருந்தது. காட்டுத் தீ பரவிவருவதால் அது ரத்து செய்யப்பட்டது.

’ஏஜென்ட் ஆப் ஷீல்ட்’ பட நடிகர் கிளார்க் கிரேக், ’சன்ஸ் ஆப் அனார்ச்சி’ நடிகர் கர்ட் ஷட்டர், ஆகியோரும் வீட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com