கண்விழித்தபோது கால்கள் இல்லை; கைகளும் அகற்ற டாக்டர் அறிவுரை.. புன்னகையால் வலியை வென்ற அமெரிக்க பெண்!

சிறுநீரக கல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதிப்பின் காரணமாக கால்கள் அகற்றப்பட்ட நிலையில் கூட அவர் தன்னம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தது பலரையும் நிகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முல்லின்ஸ்
முல்லின்ஸ்pt web
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த லுசிண்டா முல்லின்ஸ் என்ற 41 வயதான பெண்மணி செவிலியராக பணியாற்றி வந்தவர். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருந்த போதும் அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் செப்டிக் ஆன நிலையில் அவரது உடல் நோய்த்தொற்றுக்கு சரியான எதிர்வினை காட்டாத அளவிற்கு சென்றது.

அவர் ஸ்டான்போர்டில் உள்ள ஃபோர்ட் லோகன் மருத்துவமனையில் இருந்து லெக்சிங்டனில் உள்ள யுகே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பலநாட்கள் மயக்கநிலையில் இருந்துள்ளார். அவர் விழித்தபோது அவரது இருகால்களும் முழங்காலுக்கு கீழ் அகற்றப்பட்டிருந்ததுள்ளது. அவரது உயிரைக்காப்பாற்ற அவரது கைகளையும் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் முல்லின்ஸ் இதை நேர்மறையாக எடுத்துக்கொண்டார். தான் உயிருடன் இருப்பது மகிழ்ச்சி என்றும் இந்த முடிவு என் கணவர் மற்றும் இரு மகன்களுடன் நான் செலவிடும் நேரத்தை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

இச்செய்தி பரவியதில் இருந்து முல்லின்ஸ்கு ஆதரவாக பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அக்குடும்பத்திற்காக கிட்டத்தட்ட 1 லட்சம் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் 40 பேர், காத்திருக்கும் அறைகளில் எனக்காக காத்திருந்ததாக தன்னிடம் தெரிவித்தனர் என்றும் முல்லின்ஸ் கூறியுள்ளார்.

அவரது கால்கள் துண்டிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் முல்லின்ஸ் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com