திருமண நாளுக்காக ஆர்டர் செய்திருந்த வைரமோதிரத்தை தராத நிறுவனம் மீது ஜிம்பாப்வே அதிபரின் மனைவி வழக்குத் தொடந்துள்ளார்.
ஜிம்பாப்வே அதிபராக இருப்பவர் ராபர்ட் முகாம்பே. 93 வயது அதிபரின் இளம் மனைவி கிரேஸ். இவர் தனது திருமண நாளுக்காக லெபானான் தொழிலதிபர் ஜமால் ஜோசப் அகமதுவிடம் வைர மோதிரம் ஒன்றை கேட்டிருந்தார். 1.35 மில்லியன் டாலர் விலை கொண்ட இந்த 100 கேரட் வைர மோதிரத்துக்காக கடந்தாண்டு ஒப்பந்தமும் செய்திருந்தார். ஆனால், ஒப்பந்தபடி வைர மோதிரத்தை தராமல் ஜமால் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதையடுத்து இது தொடர்பாக கிரேஸ், வழக்குத் தொடர்ந்துள்ளார்.