ஸ்பெயினில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற அந்நாட்டு மன்னர் மீது, பொதுமக்கள் சகதியை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பெய்த கனமழையால், பல இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது. இதில், 60 உயிரிழப்புகள் பதிவாகி உள்ள பைபோர்ட்டா நகருக்கு, பாதிப்புகளை பார்வையிட ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் ராணி லெட்டிஸியா ஆகியோர் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த மக்கள், மன்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் மீது சகதியை வீசி உள்ளனர். தொடர்ந்து, மன்னரை சூழ்ந்துகொண்ட மக்கள், தங்களுக்கு விரைந்து உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மன்னரை மக்கள் சூழ்ந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.