ஆஸ்திரியாவில் தனது மகனை நாய்க்கூண்டில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல், ரத்தத்தை உறைய வைக்கும் மைனஸ் டிகிரி குளிரில் தண்ணீரை ஊற்றி கொடுமை படுத்திய தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது 12 வயது மகனை நாய்க்கூண்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்த சம்பவம் கேட்போரை பதைப்பதைப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவம், 2022 ஆண்டு நடைப்பெற்றள்ளது. கைது செய்யப்பட்ட தாயிடம் இது குறித்த விசாரணை நடைப்பெற்று வந்துள்ளது. இந்நிலையில், இதன் மூலம் திடுக்கிடும் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, 33 வயது நிரம்பிய பெண் ஒருவர், தனது 12 வயது மகனை நாய் கூண்டில் அடித்து வைத்து சித்தரவதை செய்துள்ளார்.
மேலும் அவ்வப்போது மட்டும் உணவினை கொடுத்தும், அடித்தும் துன்புறுத்தியுள்ளார். மேலும், 26.8 டிகிரி செல்சியஸ் குளிரில் குளிர்ந்த நீரை சிறுவனின் மேல் ஊற்றி கொடுமைப் படுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை சிறுவன் இக்கொடுமைகளை அனுப்பவித்துள்ளான் என்பது சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன்பிறகு, சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில், அச்சிறுவன் உடல்ரீதியான பாதிப்புகளையும், ஹைப்போதெர்மியா எனும் நோயால் பாதிப்படைந்துள்ளான் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், தன் மகனை கொடுமையை செய்ததை சிறுவனின் தாய் அவரின் 40 வயது தோழியிடம் தெரிவித்துள்ளார். இதனை தெரிந்தும், அதனை தட்டிக்கேட்காமல், அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தன் மகனை நல்வழிப்படுத்துவதற்காகவே இதனை செய்தேன் என்று தாய் கூறியுள்ளது கேட்போரை திகைக்க வைத்துள்ளது.
இதனால், சிறுவனின் தாய் மற்றும் தாயின் தோழியின்மீது கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு ஆஸ்திரியாவில் உள்ள நீதிமன்றத்தில் இப்பெண் குற்றவாளி என தற்போது நிரூபிக்கபட்ட நிலையில் இதற்கு உறுதுணையாக இருந்த தோழிக்கும் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தாயிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , தோழிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மனநல ஆலோசனை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.