உடல்நிலை சரியில்லாத குட்டியை மருத்துவமனைக்கு கவ்வி வந்த தாய்ப் பூனை - வைரல்  

உடல்நிலை சரியில்லாத குட்டியை மருத்துவமனைக்கு கவ்வி வந்த தாய்ப் பூனை - வைரல்  
உடல்நிலை சரியில்லாத குட்டியை மருத்துவமனைக்கு கவ்வி வந்த தாய்ப் பூனை - வைரல்  
Published on

துருக்கியில் தாய்ப் பூனை ஒன்று தனது குட்டியை மருத்துவமனைக்குத் கவ்விக் கொண்டு வந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறியுள்ளது.  


தாயின் பாசத்திற்கு இந்த உலகத்தில் ஈடிணை இல்லை என்று சொல்வார்கள். தனது குழந்தையை ஆபத்தில் பார்க்கும்போது, அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒரு தாய் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வாள். இது மனித சமூகத்திற்கு மட்டும் இல்லை. எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். ஒரு தாய்ப் பூனை தனது பூனைக்குட்டிக்கு நோய் ஏற்பட்ட போது என்ன செய்திருக்கிறது தெரியுமா?



உடல்நிலை சரியில்லாத தனது குட்டியை வாயில் கவ்விக் கொண்டு நேராக மருத்துவமனைக்குச் சென்றுள்ளது. என்னது பூனையா? மருத்துவமனைக்கா? என நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அதே ஆச்சரியம் அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த மருத்துவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் நடந்துள்ளது.

மருத்துவமனைக்கு வந்த அந்தப் பூனையை மருத்துவர்கள் பாதுகாப்பாக அரவணைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இது குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் முதலில் பகிர்ந்த மெர்வ் ஆஸ்கான், “இன்று நாங்கள் மருத்துவமனையின் எமெர்ஜென்ஸி வார்டில் இருந்தோம். ஒரு பூனை தனது குட்டியை வாயில் கவ்விக் கொண்டு எமெர்ஜென்ஸி அறைக்குள் வந்தது” என்று எழுதியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பூனையைச் சுற்றி நிறைய மருத்துவர்கள் உள்ளனர். மேலும் மிகவும் பாசமாக அதனை அரவணைக்கின்ற காட்சி அதில் பதிவாகியுள்ளது.

பூனைக்குட்டிக்கு உதவ மருத்துவர்கள் விரைந்தபோது, தாய்ப் பூனை தனது குட்டியை தன் பிடியைவிட்டு கீழே விடவில்லை. மருத்துவர்கள் பூனைக்குட்டியைக் கவனித்துக் கொள்வதற்காக, தாய்க்குப் பால் மற்றும் உணவையும் கொடுத்தனர். அதன்பின்னர் இரண்டு பூனைகளையும் ஒரு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பூனைக்குட்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுவரை இந்தப் புகைப்படங்கள் 82,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 4,400 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com