தலைநகர் நியூ மெக்சிகோவில் வருடாந்திர பலூன் திருவிழா விமரிசையாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக கடந்தாண்டு இவ்விழா நடக்காத நிலையில் இந்தாண்டு அதை ஏராளமானோர் கண்டுகளித்தனர். வெப்பக்காற்று நிரப்பப்பட்டு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்ட பலூன்கள் வானை அலங்களித்தன. 588 பலூன்கள சுமார் 9 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். 9 நாட்கள் நடைபெற உள்ள பலூன் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன.