பிலிப்பைன்ஸின் கிடாபவான் நகரில் நடந்த ஒரு சிறை உடைப்பில், நூற்று ஐம்பது கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நகரில் வடக்கு கொட்டோபாட்டோ பகுதியில் உள்ள சிறையில் இன்று அதிகாலை 150 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லீம் கிளர்ச்சி போராளிகள் இயக்கத்தை சேர்ந்த நபர்களால் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி தாக்குதலில் பாதுகாவலர் மற்றும் சிறை அதிகாரி ஒருவரும் கொலை செய்யப்பட்டனர். முஸ்லீம் போராளிகள் இயக்கத்தை சேர்ந்த நபர்களை காப்பற்ற இத்தகைய கிளர்ச்சி நடைபெற்றிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சுமார் 158 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளை பிலிப்பைன்ஸ் நாட்டின் படையினரும், போலீசாரும் தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (MILF) இயக்கத்தை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, வடக்கு பிரேசிலின் அமேசானாஸ் பகுதியில் உள்ள அனிசியோ ஜோபிம் சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் 56 கைதிகள் பலியாகி, 112 கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.