பிரான்ஸ் நாட்டு கடலில் கொட்டப்பட்ட உயிரற்ற 1 லட்சம் மீன்கள்: அதிர்ச்சி பின்னணி

பிரான்ஸ் நாட்டு கடலில் கொட்டப்பட்ட உயிரற்ற 1 லட்சம் மீன்கள்: அதிர்ச்சி பின்னணி
பிரான்ஸ் நாட்டு கடலில் கொட்டப்பட்ட உயிரற்ற 1 லட்சம் மீன்கள்: அதிர்ச்சி பின்னணி
Published on

பிரான்ஸ் நாட்டின் மேற்கு கடல் பகுதியில் சுமார் 1 லட்சம் உயிரற்ற மீன்கள் கொட்டப்பட்டுள்ளன.  அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள அந்த நாட்டின் கடற்பரப்பில் டச்சு நாட்டை சேர்ந்த இழுவை கப்பல் ஒன்று இந்த செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் போர்த்தப்பட்டிருக்கும் கம்பளிபோல அந்த இடம் காட்சி அளித்துள்ளது. அதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவனித்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அன்னிக் ஜிரார்டின் இந்த படங்கள் தங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான முழுமையான தகவல் மற்றும் ஆதாரத்தை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார் சுற்றுச்சூழல், பெருங்கடல்கள் மற்றும் மீன் வளத்திற்கான ஐரோப்பிய ஆணையர் விர்ஜினிஜஸ் சின்கேவிசியஸ். கடந்த வியாழன் அன்று காலை இழுவைக் கப்பலில் இருந்து மீன்கள் கடலில் கொட்டப்பட்டுள்ளன. இருந்தாலும் அந்தக் கப்பலில் இருந்த மீன் வலையில் ஏற்பட்ட சிதைவு காரணமக மீன் கடலில் கொட்டியிருக்கலாம் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர். 32,300 சதுர அடி கடல் பரப்பை இந்த உயிரற்ற மீன்கள் மிதந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com