பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.