மீசை தாடியுடன் மோனலிசா! ரூ.50கோடிக்கு விற்பனையான ஓவியம்

மீசை தாடியுடன் மோனலிசா! ரூ.50கோடிக்கு விற்பனையான ஓவியம்
மீசை தாடியுடன் மோனலிசா! ரூ.50கோடிக்கு விற்பனையான ஓவியம்
Published on

பிரான்சில் ஓவியர் ஒருவர் மோனலிசா ஒவியத்திற்கு மீசை, தாடி வரைந்து அதனை 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.   

லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மோனலிசா ஓவியம் உலக அளவில் புகழ்பெற்றது. உலகின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றான இந்த பெண் ஓவியத்திற்கு உலக அளவில் ரசிகர்கள் பலர். இந்த மோனலிசா ஓவியம் பல ஓவியர்களின் கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றி வரையப்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் பாரிஸை சேர்ந்த ஓவியர் மோனலிசா ஓவியத்தை வரைந்து அதை ஆண் போல் மாற்றி வடிவமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மார்ஷல் டுச்சாம்ப் என்ற ஓவியர் மோனலிசா ஓவியத்தை வரைந்து அதில் மீசையும், தாடியும் வரைந்துள்ளார். 

பின்பு இந்த ஓவியத்தை பிரான்ஸின் ஓவியக் கண்காட்சியில் வைத்துள்ளார். பார்ப்பவர்களின் கண்களுக்கு மிகவும் வித்தியாசமாக காட்சி தந்த அந்த ஓவியம் அனைவரின் கவனைத்தையும் எளிதில் ஈர்த்தது. இந்த ஓவியத்திற்கு இந்திய மதிப்பில் 40 கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளார் அந்த ஓவியர்.பலர் இந்த ஓவியத்தை வாங்க போட்டி போட்டுள்ளனர். இறுதியில் ரூபாய் 50 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. மார்ஷல் டுச்சாம்ப் வரைந்த மற்ற ஓவியங்களும் இந்த கண்காட்சியில் அதிக அளவில் விற்பனை ஆகின.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com