ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருக்கு பணமோசடி வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட பெக்கர், 2012 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். 6 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற பெக்கர், ஓய்வுக்குப் பிறகு, தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து சட்டப்படி திவாலானவராக அறிவிக்கப்பட்ட பெக்கர், சட்டவிரோதமாக பணத்தை தனது குடும்பத்தினருக்கு மாற்றம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் பெக்கருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.