மியான்மர் அதிபர் ஹைதின் கியாவுடனான சந்திப்பு சிறந்த முறையில் அமைந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவைத் தொடர்ந்து அண்டை நாடான மியான்மருக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி மியான்மரில் உள்ள நேப்பிதாவ் நகருக்கு சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் ஹதின் கியாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, போதி மரத்தின் சிலையை, கியாவுக்கு பரிசாக மோடி வழங்கினார். பின்னர் இருவரும், இருதரப்பு நாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர். இதைத்தொடர்ந்து இன்று மியான்மர் நாட்டு அரசு ஆலோசகர் ஆங் சாங் சூச்சியை மோடி சந்திக்கிறார். ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிராக மியான்மரில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.