தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான் மற்றும் தரைவழித் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. ஹைஃபா நகரை குறிவைத்து ஏவப்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை நடுவானில் தடுத்து நிறுத்தி இஸ்ரேல் ராணுவம் அழித்தது. எனினும் முன்னெச்சரிக்கையாக மக்களை உஷார்படுத்தும் விதமாக ஹைஃபா நகரில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
வானில் இருந்து விழுந்த ஏவுகணைகளின் பாகங்கள் வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தின. எனினும் உயிர்சேதம் ஏற்படவில்லை என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.