போலந்தில் விழுந்த ஏவுகணை யாருடையது?.. வெளியானது உண்மை! பூம்ராங் ஆன ஜெலென்ஸ்கி பேச்சு!

போலந்தில் விழுந்த ஏவுகணை யாருடையது?.. வெளியானது உண்மை! பூம்ராங் ஆன ஜெலென்ஸ்கி பேச்சு!
போலந்தில் விழுந்த ஏவுகணை யாருடையது?.. வெளியானது உண்மை! பூம்ராங் ஆன ஜெலென்ஸ்கி பேச்சு!
Published on

போலந்து மீதான ஏவுகணைத் தாக்குதல் தற்செயலான ஒரு விபத்தாக அமைத்திருக்கலாம் என உக்ரைனின் ராணுவ பிரிவுதுறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன்  இடையேயான போர் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தோல்வியை சந்தித்த நிலையில், இன்றும் இரு நாடுகளிடையும் போர் பதற்றம் தணியவில்லை. போலாந்து மீது ஏவுகணை தாக்குதல் நடந்த செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். ஏவுகணையின் பொறுங்கிய பாகங்களை வைத்து, அது ரஷ்யாவின் ஏவுகணை என முதல்கட்ட விசாரணையில் கூறப்பட்டது.

இதனால் ரஷ்யா - நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட உக்ரைனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவை கடுமையாக குற்றம் சாட்டினார்.


மேலும் அவர், ’’ ரஷ்யாவின் பயங்கரவாதமும், போர் குற்றமும் எல்லையற்றது. போலாந்தில் இறந்த மக்களுக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நேட்டோ எல்லைக்குள் ஏவுகணைகளை வீசுவது என்பது, கூட்டுப் பாதுகாப்புக்கு எதிரான தாக்குதலாகும். இது மிகப் பெரிய தவறு. நாம் உடனடியாக ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் ’ என கடுமையாக சாட்டினார்.

பொதுமக்கள் பலரும் ரஷ்யாவுக்கு கண்டனங்களை பதிவு செய்ய தொடங்கினர். ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தது. மேலும் இதுபோன்ற அவதூறுங்களை தங்களை கோபப்படுத்துவதாகவும் கூறியது.

மறுபக்கம் அமெரிக்கா தொடர்ச்சியாக, இந்த ஏவுகணை உக்ரைன் இராணுவத்தால் ஏவப்பட்டதாக இருக்கலாம் என கூறிவந்தது. இதனைத் தொடர்ந்து, மறுபக்கம் உக்ரைனின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா ஏவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க அதிகாரிகளும் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, போலாந்தில் ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் ரஷ்யாவை சேர்ந்தவை அல்ல என்பதை உறுதி செய்தனர். மேலும் ஏவப்பட்டது உக்ரைன் ராணுவத்துடையது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் தற்போது அவருக்கே திரும்பி உள்ளது. இதுகுறித்து தற்போது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுவது, ‘ இது ஒரு விபத்து. உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட நிகழ்வல்ல.. ஒரு பிழை’ என்றுள்ளார்.

மேலும் போலந்தின் ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா, தனது நாட்டில் விழுந்து இரண்டு பேரைக் கொன்ற ஏவுகணை "துரதிர்ஷ்டவசமான விபத்து" தான் என்று தோன்றுகிறது என்று கூறினார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, உக்ரைன் வான் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஏவுகணை சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றோ அல்லது அந்த ராக்கெட் ரஷ்ய தரப்பால் ஏவப்பட்டது என்றோ நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com