கொரோனா குறித்த தவறான தகவலை அதிகமாக அளித்த ட்ரம்ப் - ஆய்வு முடிவு

கொரோனா குறித்த தவறான தகவலை அதிகமாக அளித்த ட்ரம்ப் - ஆய்வு முடிவு
கொரோனா குறித்த தவறான தகவலை அதிகமாக அளித்த ட்ரம்ப் - ஆய்வு முடிவு
Published on

உலக அளவில் கொரோனா பற்றிய முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அதிகம் வெளியிட்ட ஒற்றை மனிதராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொரோனா பற்றிய 38 மில்லியன் ஆங்கிலக் கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனா பற்றிய கட்டுரைகளை ஆய்வு செய்தனர். அதில் 38 சதவீத தவறான தகவல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்துள்ளார். அவர்தான் உலகிலேயே அதிகமான தவறான செய்திகளை அளித்தவராக இருக்கிறார். அதனை ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் இன்ஃபோடெமிக் என்று அழைத்துள்ளனர். இதன் அர்த்தம் தவறான செய்திகளின் தொற்று.

சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவல்கள், கட்டுரைகளை அடிப்படையாகக் கண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"உலகிலேயே கொரோனா தொடர்பான தவறான தகவல்களை அதிகம் அளித்த ஒற்றை மனிதராக அமெரிக்க அதிபர் இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார் ஆய்வு இயக்குநரான சாரா இவானேகா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com