‘விமான உற்பத்திக்கு வாருங்கள்’ - அமெரிக்க நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

‘விமான உற்பத்திக்கு வாருங்கள்’ - அமெரிக்க நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு
‘விமான உற்பத்திக்கு வாருங்கள்’ - அமெரிக்க நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு
Published on

இந்தியாவில் விமானங்களை உற்பத்தி செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேச உள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார்.



இரு நாடுகளின் இரு துறை அமைச்சர்கள் சந்திக்கும் இந்நிகழ்வு டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை என அழைக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்காவின் விமான நிறுவனங்களான போயிங் மற்றும் ரேத்தியான் ஆகியவற்றின் அதிகாரிகளை வாஷிங்டனில் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் விமானங்களை உற்பத்தி செய்ய முன்வருமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி காணொளி முறையில் சந்தித்த பேச உள்ளார். உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இச்சந்திப்பில் பேசப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com