கியூபாவின் புதிய அதிபராக மிகுல் டயஸ் கேனல் (MIGUEL DIAZ-CANAL) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ரால் காஸ்ட்ரோவிடம் இருந்து பொறுப்பைப் பெற்றுக் கொண்டுள்ள டயஸ் கேனல், நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் மாற்றப்படாது என்றும், தேவைப்படும் நேரத்தில் மாற்றத்தை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ரால் காஸ்ட்ரோ கொண்டு வந்த சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் புதிய அதிபர் தெரிவித்துள்ளார். நாட்டின் அதிபர் பதவியில் இருந்து ரால் காஸ்ட்ரோ விலகிவிட்ட போதிலும் ஆளும் கட்சியின் தலைவராக அவர் தொடர்ந்து நீடிக்கிறார். இதனால் கியூபாவின் அரசியலில் அவரின் முடிவுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.