Crowdstrike  - microsoft
Crowdstrike - microsoft facebook

திக்குமுக்காடிய உலகம்.. மன்னிப்பு கேட்ட Crowdstrike நிறுவனம்! சத்யா நாதெள்ளா கொடுத்த உறுதி!

மைக்ரோசாப்ட் அப்டேட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் உலகளவில் விமான போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மிகப்பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
Published on

மைக்ரோசாப்ட் அப்டேட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையால் உலகளவில் விமான போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மிகப்பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. மைக்ரோசாப்ட் OS உலகம் முழுவதும் 140 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்டின் வருகைக்குப் பிறகு பல துறைகள் கணினி மயமாக்கப்பட்ட நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் ஓ.எஸ் அப்டேட் ஜூலை 18 நள்ளிரவில் இருந்து அமலுக்கு வந்தது. எப்போதும் புதிய அப்டேட் வரும் பட்சத்தில் அந்த அப்டேட்டை மேற்கொள்வதன் மூலம் மென்பொருளை பாதுகாப்போடும் எளிமையாகவும் பயன்படுத்த முடியும்.

அப்படித்தான் பல பயனாளர்கள் புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்தனர். ஆனால், அப்டேட் ஆகி கணினி ரீஸ்டார்ட் ஆனவுடன் BSOD எனப்படும் நீலத்திரை கணினியில் தெரிந்தது. ஆரம்பத்தில் தங்கள் கணினியில் பிரச்சனை என நினைத்த பயனாளர்கள் நேரம் செல்ல செல்ல பலருக்கும் இதே பிரச்சினை உலக அளவில் இருப்பதை தெரிந்து கொண்டனர்.

குறிப்பாக, மைக்ரோசாப்டின் புதிய அப்டேட் செய்த கணினியில் ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் mode திரையில் தெரிந்தது. இந்திய நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பிரச்சனை அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளை முடக்கியது. குறிப்பாக விமான போக்குவரத்து துறை மிகப்பெரிய அளவில் நடுக்கத்தை கண்டிருக்கிறது. அமெரிக்காவில் 512 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

Crowdstrike  - microsoft
ஒடிசா: விநோத தாந்திரீக சிகிச்சை.. 4 வருடங்களாக தலையில் 18 ஊசிகளுடன் வாழ்ந்து வந்த இளம்பெண்!

ஜெர்மனியில் 92 விமானங்களும் இந்தியாவில் 55 விமானங்களும், இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் கணிசமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் டிஜிட்டல் தகவல் பலகைகள் அனைத்தும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் அளவிற்கு விமான நிலையத்தின் முழு செயல்பாடுகளும் முடங்கி உள்ளது. பெர்லின், டெல்லி, லண்டன், சிங்கப்பூர், உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் முக்கிய விமான நிலையங்கள் தங்களது முழுமையான சேவையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மைக்ரோசாஃப்ட் AZUR மென்பொருளில் ஏற்பட்டுள்ள சிக்கலால் இண்டிகோ விமான போக்குவரத்து அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான போக்குவரத்து துறையில் நிலை இவ்வாறு என்றால் தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை மிகப் பெரிய அளவில் அதிர்வைச் சந்தித்துள்ளது. சென்னை, மும்பை ,ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இந்திய நகரங்களில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் வேலை மேற்கொள்ளாத முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், Crowdstrike நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அந்த நிறுவனம் நிபுணர்களுடன் இணைந்து மைக்ரோசாப்ட் பொறியியல் வல்லுநர்கள் இணைந்து பணியாற்றி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சத்யா நாதெள்ளா
சத்யா நாதெள்ளா
Crowdstrike  - microsoft
மழைக்கால கூட்டத்தொடர் | 6 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் மத்திய அரசு!

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெள்ளா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”Crowdstrike நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அப்டேட் உலகளவில் தகவல் தொழில்நுட்ப துறையை முடக்கியுள்ளது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் பணி நடந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் ஆன்லைன் இயக்கத்தை மீட்டெடுக்கும் வகையில் Crowdstrike உடன் மைக்ரோசாப்ட் இணைந்து இயங்கி வருகிறது. மேலும், சிக்கலில் இருந்து மீள வாடிக்கையாளர்களுக்கு தேவையான வழிகாட்டு முறையை வழங்கி வருகிறோம்.’”என்று சத்யா நாதெள்ளா விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல், Crowdstrike நிறுவனத்தின் தலைவர் ஜார்ஜ் கர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தொழில்நுட்ப பிரச்னைக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். விரைந்து சிக்கல் கண்டறிந்து அதற்கான தீர்வு காணப்படும். இது சைபர் தாக்குதல் இல்லை . மேலும், அனைத்து சிஸ்டம்களின் இயக்கத்தை மீட்டெடுக்க, வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.”என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com