மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்
Published on

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், மைக்ரோசாப்ட். இந்த நிறுவனத்தை பில் கேட்ஸும் பவுல் ஆலனும் இணைந்து 1975 ஆண்டு தொடங்கினர். உலகம் முழுவதும் பிரபலமான இந்த நிறுவனம் கணினிக்குத் தேவையான  மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. 

வெற்றிகரமான இந்த நிறுவனத்தில் இணை நிறுவனர், பவுல் ஆலன் கடந்த ஒன்பது வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்ப ட்டிருந்தார். அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.


இதை அவரது சகோதரி ஜோடி உறுதி செய்துள்ளார். அவர் கூறும்போது, ‘ஒவ்வொரு மட்டத்திலும் அவர் தனித்துவமானவர். அவரை பிரபல நன்கொடையாளர், டெக்னாலஜிஸ்ட் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் எங்களுக்கு சிறந்த சகோதரராக, நண்பராக, சிறந்த நகைச்சுவையாளராக விளங்கியவர்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியவர் பால். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ள இவர், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

பால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில் கேட்ஸ் தாங்கள் ஆரம்பகாலத்தில் இந்த நிறுவனத்தை எப்படி ஆரம்பித்தோம் என்பதை நினைவு கூர்ந்துள்ளார். ‘பால் ஆலனின் மறைவைக் கேட்டதும் இதயம் உடைந்துவிட்டது. பால் சிறந்த பார்ட்னராகவும் நண்பராகவும் விளங்கியவர். அவர் இல்லை என்றால் கணினி உருவாக்கம் சாத்தியமாகி இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com