அமெரிக்காவிற்குள் நுழையக் காத்திருக்கும் ஹைதி அகதிகளை தங்கவைக்க மெக்சிகோ சியூதாத் அகுனா நகரில் சிறப்பு முகாம் ஒன்றை அமைத்துள்ளது மெக்சிகோ.
இந்த முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சத்தான உணவு மற்றும் குடிநீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. 14ஆயிரத்திற்கும் அதிகமான ஹைதியைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையும் பொருட்டு RIO GRANDE ஆற்றின் அருகே காத்திருக்கின்றனர்.
இவர்களில் சிலர் மட்டுமே மாநகராட்சி அமைத்துள்ள சிறப்பு முகாமில் தங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மெக்சிகோ வழியாக நாட்டிற்குள் நுழையும் ஹைதி மக்களை அமெரிக்க ராணுவத்தினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அடைக்கலம் கேட்டு புகுந்த ஹைதி மக்கள் மீண்டும் அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையையும் அமெரிக்கா தொடர்ந்து வருகிறது.