200 ஆண்டுகால வரலாறு: மெக்சிகோ நாட்டில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு

மெக்சிகோ நாட்டில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
கிளாடியா ஷீன்பாம்
கிளாடியா ஷீன்பாம் எக்ஸ் தளம்
Published on

மெக்சிகோவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனால் கிளாடியா அதிபர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்படுகிறார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை (Quick Count) உறுதி செய்துள்ளது.

இதையும் படிக்க: தொடரும் மாரடைப்பு மரணங்கள்: கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த மும்பை வீரர்! #ViralVideo

கிளாடியா ஷீன்பாம்
'உலகில் போர்களை தடுக்க மோடி தலைமையில் குழு அமைக்கலாம்' – மெக்சிகோ அதிபர் யோசனை

தன்னுடன் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இருவர், தனக்கு வாழ்த்து சொல்லி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து கிளாடியா ஷீன்பாம், ”நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரதமர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வழியில் கிளாடியாவின் ஆட்சிக் காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

61 வயதான கிளாடியா ஷீன்பாம் வரும் டிசம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நகர மேயாரகவும் அவர் பணியாற்றியுள்ளார். தவிர, விஞ்ஞானியாகவும் இருந்துள்ளார்.

இதையும் படிக்க: விரைவில் அமெரிக்கா.. பிரிவுக்கு முற்றுப்புள்ளி? மீண்டும் படங்களைப் பகிர்ந்த ஹர்திக் பாண்டியா மனைவி!

கிளாடியா ஷீன்பாம்
"ஊழல் ஒழிந்தால்தான் மாஸ்க் அணிவேன்" மெக்சிகோ அதிபர் அதிரடி !

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com