டொமினிக் குடியரசு காவல்துறையால் கைது செய்யப்பட்ட, இந்தியாவால் தேடப்படும் நபரான மெகுல் சோக்சி காவலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அவற்றில் சோக்சியின் கண்ணிலும், கையிலும் ரத்தக்காயங்கள் தெரிவதால், காவல் துறையினர் அவரைப் பிடிக்கும்போது தாக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தியாவில் மெகுல் சோக்சியும் அவரது உறவினரான நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து தப்பிய மெகுல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வந்தார். இந்த நிலையில் அங்கிருந்து திடீரென தலைமறைவான மெகுல் சோக்சி டொமினிகாவில் சிக்கினார். தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.