அமெரிக்காவில் பதிவான மிக நீளமான மின்னல் - 3 மாகாணங்களில் பதிந்து உலக சாதனை

அமெரிக்காவில் பதிவான மிக நீளமான மின்னல் - 3 மாகாணங்களில் பதிந்து உலக சாதனை
அமெரிக்காவில் பதிவான மிக நீளமான மின்னல் - 3 மாகாணங்களில் பதிந்து உலக சாதனை
Published on

அமெரிக்காவில் கடந்த ஆண்டு வானில் தோன்றிய மின்னல் ஒன்று, புதிய உலக சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி, வானில் மின்னல் ஒன்று தோன்றியது. இந்த மின்னல் அங்குள்ள லூசியானா, மிசிசிப்பி மற்றும் டெக்சாஸ் ஆகிய 3 மாகாணங்கள் முழுவதும் மொத்தம் 477.2 மைல்கள், அதாவது 768 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாக ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சரியாக மின்னலின் இந்தத் தூரத்தை குறிப்பிட வேண்டுமெனில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்திற்கு சமமானது என ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று, தெற்கு பிரேசில் பகுதியில் பதிவான ஒரு மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீட்டர்கள் அதிகமாக அமெரிக்கா மின்னல் பதிவாகி உள்ளது. 

இதே போன்று 2020-ம் ஆண்டில் உருகுவே மற்றும் வடக்கு அர்ஜென்டினா மீது ஒரே ஒரு மின்னல் 17.1 வினாடிகள் நீடித்தது. இந்த மின்னல் பழைய சாதனையான 16.7 வினாடிகளை முறியடித்தது. பருவநிலை மாற்றத்துடன் தொடர்பில்லாத இந்தப் பதிவுகள், புதிய செயற்கைக்கோள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன.

ஐ.நா.வானிலை மற்றும் கால நிலை அதிகாரி ராண்டால் செர்வெனி தெரிவிக்கையில், "இது இயற்கை நிகழ்வுகளின் அசாதாரண பதிவுகள். பொதுவாக மின்னல் 10 மைல்களுக்கு மேல் நீடிக்காது. மேலும், ஒரு வினாடிக்கும் குறைவாகவே நீடிக்கும். இந்த இரண்டு மின்னல் பதிவுகளும் முற்றிலும் அசாதாரணமானவை. இரண்டுமே மேகம் முதல் மேகம் வரை, தரையில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்ததால் யாருக்கும் ஆபத்து இல்லை" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com