ரஷ்யாவில் உள்ள அனைத்து உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஆப்பிள், நெட்ஃபிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. அந்த வரிசையில் தற்போது மெக்டொனால்டு இணைந்துள்ளது. ரஷ்யாவில் தங்களுக்குச் சொந்தமான 850 உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு அறிவித்துள்ளது. இதே போன்று, ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோக கோலா, பெப்சியும் அறிவித்துள்ளன.
இதையும் படிக்க: அடுத்தடுத்து விழும் அடி - ரஷ்யாவிற்கான கடன் தகுதி மதிப்பீடு குறைப்பு