நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு!

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு!
நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழப்பு!
Published on

நியூசிலாந்தில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்து ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக் கிழமை என்பதால், இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகை நடத்த சென்றனர். அப்போது அங்கு பயங் கரமாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து பங்களாதேஷ் வீரர்கள் தப்பி, ஓட்டலுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர். 

இதற்கிடையே மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இயந்திர துப்பாக்கியுடன் வந்த ஒருவன் தொழுகையில் ஈடுபட்டி ருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். சுமார் 15 நிமிடம் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தான். இதையடுத்து பலர் சுவர் ஏறி குதித்து உயிர் தப்பினர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மசூதியை சுற்றி வளைத்தனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததாக நியூசிலாந்து ஹெரால்டு இணைய இதழ் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்தச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அங்குள்ளவர்கள், வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் சந்தேகத்துக்குரிய நடமாட்டங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீசார் தெரி வித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com