இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது காதுகளில் அணிந்திருந்த ஏர்பட்ஸ் ஒன்றை தூக்கக்கலக்கத்தில் விழுங்கிவிட்டார்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் வசித்துவரும் 38 வயதான பிராட் கவுதியர் என்பவர் காலையில் தூங்கி எழும்பியபோது தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அத்துடன் மார்பு வலியும் அவருக்கு இருந்துள்ளது.
இதையடுத்து உறவினர்கள் பிராட் கவுதியரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போதுதான் தூங்கி எழும்புகையில் தன்னுடைய ஏர்பட்ஸ்களில் ஒன்றை காணவில்லை என்றும் அதை, தான் விழுங்கியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுவதாகவும் டாக்டர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து எக்ஸ்ரே செய்து பார்க்கையில் உணவுக்குழாயில் ஏர்பட் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ‘எண்டோஸ்கோபிக்’ சிகிச்சை மூலம் பிராட் கவுதியரின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த ஏர்பட்டை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது நலமாகி வீட்டிற்கு வந்து விட்டதாக பிராட் கவுதியர் தெரிவித்துள்ளார்.