சில மணி நேரத்தில் ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர் பெர்க்.. இதுதான் காரணமா?

மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மார்க் ஜுக்கர்பர்க்
மார்க் ஜுக்கர்பர்க்ட்விட்டர்
Published on

உலக முழுவதும் சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பல சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஃபேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட வலைதளங்களும் பயனர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளங்களாக இவையிரண்டும் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 5) மாலை உலகம் முழுவதும் அந்த இரண்டு சமூக வலைதளங்களும் சில மணி நேரம் முடங்கியதால் பயனர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.

இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர். முக்கியமாக ஊடக நிறுவனங்கள் செய்திகளை உடனுக்குடன் பகிர முடியாமல் சிரமப்பட்டன. இதனால், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர். சிலரால் Instagram பக்கங்களைப் புதுப்பிக்க முடியவில்லை. பல பயனர்கள் கடவுச்சொற்களை மாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்த இரண்டு தளங்களிலும் உள்ள உள்நுழைவு சிக்கல்கள் குறித்து பயனர்கள் புகார் அளித்தனர். பின்னர், சில மணி நேரத்திற்குப் பிறகு அதன் தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

இந்த நிலையில், இன்று அமெரிக்க பங்குச் சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது. இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

2004 ஆம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய மெட்டா நிறுவனம், ஃபேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட வலைதளங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் உலகம் முழுவதும் 300 கோடிக்கு அதிகமான பயனர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com