ஓர் இளைஞனால் உலகில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என நிரூபித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க், இன்று 34 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
ஃபேஸ்புக்கை உலகின் முன்னணி சமூக வலைதளமாக வைத்துள்ள மார்க் 1984ஆம் ஆண்டு மே 14ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் சேர்மன், தலைமை செயல் அதிகாரி, இணை நிறுவனர் என இயங்கி வரும் மார்க் எல்லியாட் ஜக்கர்பெர்க், உலகிலேயே 5வது பெரும் பணக்காரர். தற்போதைய அவரது சொத்து மதிப்பு 58.6 பில்லியன் டாலர்.
2004, பிப்ரவரி 4,ம் தேதி ஹார்வர்டு ஓய்வறையில் இருந்து ஃபேஸ்புக்கை நிறுவினார் மார்க். பின்னர் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு சில நண்பர்களுடன் ஒரு சிறிய இல்லத்தை குத்தகைக்கு எடுத்து அவரது முதல் அலுவலகமாக மாற்றினார். அந்த அலுவலகம் தான் தற்போது உலகின் முக்கிய அடையாளமாக வேரூன்றி நிற்கிறது.
மார்க் உலக மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் டெக் சி.இ.ஓ. ஆனால் அவர் விரும்பும் விஷயங்கள் கல்வியும், ஆரோக்கியமும் தான். கல்வி என்பது ஒருவருக்கு முதன்மையான தேவைகளில் ஒன்று. இதற்காகத் தான் 2015-ம் ஆண்டு முழுவதும் இயர் ஆஃப் புக்ஸ் என்ற சபதத்தோடு வருடம் முழுக்க புத்தகமாக படித்துத் தள்ளினார். அடுத்த வருடம் முழுக்க இயர் ஆஃப் ரன்னிங் என்று உலகம் முழுவதும் 365 மைல்கள் ஓடினார். இதெல்லாம் மக்களை இணைக்கும் விஷயங்கள் என்று மார்க் நம்புகிறார். நாடுகள் புவியியல் அமைப்பால் மட்டுமே பிரிந்திருக்க வேண்டும் என்பது தான் மார்க்கின் விருப்பம்.